தமிழகம்

தரமற்ற பள்ளி கட்டிடங்களுக்கு ஆப்பு… 19 அதிகாரிகள் நியமனம்!

Nellai
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியின் கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி விஸ்வ ரஞ்சன், அன்பழகன், சுதிஷ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் சேக் அபுபக்கர், சஞ்சய், இசக்கி பிரகாஸ், அப்துல்லா ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கு காரணமான சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஆகிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுவர் இடிந்து விழுந்தது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதால் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  தமிழகம் முழுவதும் தீ தொண்டு திருவிழா !

பள்ளி கழிப்பறையின் தரமற்ற சுவர் இடிந்து பள்ளி மாணவர்கள் 3 பேர் உடல் நசுக்கி பலியான சம்பவம் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளதை தொடர்ந்து, பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டிடங்களின் தரத்தை ஆராய பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் பதவியில் உள்ள 19 அதிகாரிகளை நியமித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா :

naveen santhakumar

பேரறிவாளன் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

Admin

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்வு

naveen santhakumar