தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் || Tamil News heavy  rain likely five districts in TN

இதன்படி இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ  நகர்புற ஏழைகள், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகள்: உலக வங்கியுடன், மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம்... 
Many Districts In Tamil Nadu To See Heavy Rainfall In 48 Hours - DTNext.in

மேலும், தேனி, சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ரஜினிகாந்த் வீடியோவை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்...

அடுத்த 3 நாட்களுக்கு கேரளா, கர்நாடகாவை ஒட்டியுள்ள அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டபடிப்பு – ஆகஸ்ட்.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

naveen santhakumar

கொரோனா குறித்து ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ…

naveen santhakumar

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar