சினிமா தமிழகம்

ரஜினிகாந்த் வீடியோவை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாளை சுய ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பல தவறான தகவல்களை கூறியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக இந்த வீடியோவை நீக்கியுள்ளது.

ரஜினிகாந்த இந்த வீடியோவில் 14 மணி நேரம் கொரோனா பரவலை தடுத்து விட்டால் அதன் பிறகு இந்த வைரஸ் பரவாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடையாது. இது உலக அளவில் மிக முக்கிய பிரச்சனை என்பதால் தவறான தகவல்கள் பரவக்கூடாது என்ற நோக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் இந்த வீடியோவை நீக்கியுள்ளது.

ALSO READ  நெருங்கிய தோழிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி -நடிகை நதியா

ரஜினியின் கணக்கை கிட்டத்தட்ட ஆறு மில்லியன் அளவுக்கு பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் ரஜினி போன்றவர்கள் இதுபோன்ற நிரூபிக்கப்படாத தவறான தகவல்களை பரப்பலாமா என்று பல்வேறு தரப்பிலும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் ரஜினிகாந்த் இந்த வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் பதவியேற்பு எப்போது?

மேலும் அவர் வீடியோவில் கூறியதை புகைப்படமாக எடுத்து அதோடு இணைத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரசாந்த் படத்தை இயக்குகிறாரா மோகன் ராஜா?

Admin

மாஸ் காட்டும் முகேன் ராவ் – ’வேலன்’: மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

naveen santhakumar

நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி :

Shobika