தமிழகம்

முதல் டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி நீலகிரி மாவட்டம் சாதனை..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து நீலகிரி கலெக்டர் திருமதி. ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறுகையில் , நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் 5 லட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர் . மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 760 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . மொத்தம் 5 லட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு போடப்பட்டுள்ளது .

18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் செலுத்தி இலக்கு எட்டப்பட்டது . 6,277 பேருக்கு கொரோனா பாதித்து உள்ளதால் , 3 மாதங்களுக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும் . தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்தவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- விரைவில் அறிவிப்பு..

இந்த சாதனை சாதாரணமாக நிகழவில்லை. பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், களப்பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், சுகாதாரத்துறை எனப் பல த துரப்பின் பங்கும் நிறைந்துள்ளது. பலரும் இரவு, பகலாக உழைத்ததன் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செம்ம ஹேப்பி நியூஸ்… இனி இவர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு!

naveen santhakumar

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது…….

naveen santhakumar

வீதியின் விதி மாற்றுவோம்!

News Editor