தமிழகம்

தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசிய போது, ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் இந்த நன்நாளில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் இந்தியாவிலேயே 1923 ஆம் ஆண்டு முதல் மே தினம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் தி.மு.க. என்றும் இந்தியாவில் முதன் முறையாக விடுப்புடன் சம்பளம், பணிக்கொடை வழங்கல், 20 சதவீதம் போனஸ் கொடுத்ததும், கூலி தொழிலாளர்களுக்கு வீடு, கை ரிக்சா ஒழிப்பு,விபத்து காப்பீட்டு திட்டம் என அனைத்தையும் தந்தது கலைஞர் அரசு தான் என்றார்.

மேலும் தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். மே தின விழாவான இன்று அந்த சட்டத்தை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர் நலனுக்கு பாடுபடும். திமுக என்றைக்குமே தொழிலாளர்கள் நலனை பேணிக் காக்கும். தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது இவ்வாறு அவர் கூறினார்.


Share
ALSO READ  வழக்கறிஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொறியியல் பட்டப்படிப்பு முதல் செமஸ்டர் மாணவர்களுக்கு நவம்பர்-23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்:

naveen santhakumar

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..

Shanthi

BREAKING தமிழகம் முழுவதும் தடை… காவல்துறை அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar