இந்தியா தமிழகம்

ஆன்லைன் ரம்மி: ரம்மி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ரம்மி நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் தேதி அளித்துள்ள தீர்ப்பில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, சட்டத்தை ரத்து செய்தும் மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது எனவும் இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும், எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ  பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம்-உச்சநீதிமன்றம் அதிருப்தி

இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் மேலும் வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வு – கோவை மாணவர் விஷம் குடித்து தற்கொலை

naveen santhakumar

புயலை வரவேற்கும் மக்கள்……காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க……

naveen santhakumar

தீபாவளி – பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை…!

naveen santhakumar