தமிழகம்

மனைவின் கழுத்தை அறுத்துக் கொன்ற பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்த உயர்நீதிமன்றம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கல்லூரி பேராசிரியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தணடனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


சென்னை அண்ணாநகரில் கண்ணன் மோகனாம்பாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளனர். 40 வயதாகும் கண்ணன் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த மோகனாம்பாள் வசதி குறைவான கல்லூரி பேராசிரியர் கண்ணனை திருமண செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆனா சில மாதங்களுக்கு பிறகு வசதி குறைபாட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த மோகனாம்பாள் தனது  கணவரை உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று தினமும் வாக்குவாதம் நடந்துவந்துள்ளது.

அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இதே போல் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றிப்போக இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவர் கண்ணன் வீட்டில் இருந்த அம்மி கல்லை கொண்டு மனைவி மோகனாம்பாளை தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு கண்ணன் அவர் மனைவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்து கொலை செய்துள்ளார். 

ALSO READ  அரசு பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டம் 


பின்னர் இது தொடர்பாக  திருமங்கலம் காவல்துறையினர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்தது வந்த இந்த வழக்கின் விசாரணையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி  ஏ.ஆர்.வி.ரவி முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் பேராசிரியர் கண்ணன் குற்றம் செய்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தது அவருக்கு தூக் கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வு பாதிப்புகள்: 85,935 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன – ஏ.கே.ராஜன் குழு …!!!

naveen santhakumar

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறி சென்று விட்டதா; சுகாதார செயலாளர் விளக்கம் !

News Editor