தமிழகம்

பொதுத்தேர்வு ரத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

ALSO READ  மே 3ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டம்...

இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார்.  மேலும், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅறிவித்தார். இவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு மட்டும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80% வழங்கப்படும். மேலும் இவருடைய வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுத்தேர்வு சூழலுக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது – சவுமியா சுவாமிநாதன்

News Editor

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்- தொடங்கி வைத்தார்

News Editor

இருசக்கர வாகனங்களில் வீடுகள் தேடி இலவச ஆக்ஸிஜன் சேவை !

News Editor