தமிழகம்

மூக்குத்தி அம்மன் அருளால் வெற்றி பெற்ற பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு வாழ்த்துக்கள்…ஆர்.ஜே.பாலாஜியின் குசும்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

ஆர்ஜே பாலாஜி ஷேர் செய்திருக்கும் மூக்குத்தி அம்மன் பட போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பிடன் 290 இடங்களை கைப்பற்றி வாகை சூடியுள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ALSO READ  ரஜினியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் அண்ணாத்த படம்  நிறுத்தம்...!

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தை வைத்து குசும்பு செய்திருக்கிறார் அதன் இயக்குநரான ஆர்ஜே பாலாஜி. அதாவது ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மூக்குத்தி அம்மன் பட போஸ்டரை ஷேர் செய்து, மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதில் அந்த போஸ்டர்தான் ஹைலைட், மாஸ்க் அணிந்தப்படி கைகளை கோர்த்து உயர்த்தி பிடித்திருக்கும் ஜோபிடன், கமலா ஹாரிஸூக்கு மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா ஆசிர்வாதம் வழங்குவது போல் உள்ளது அந்த போஸ்டர்.

ALSO READ  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண்….

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் 14-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஷேர் செய்திருக்கும் இந்த போஸ்டர் பலரது கவனத்தையும் பெற்று வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் முடிந்து வேலைக்கு திரும்புவோர் கவனத்திற்கு!

naveen santhakumar

தடம் புரண்ட ரயில்: நடந்தது என்ன? – ரயில்வே விளக்கம்

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

News Editor