தமிழகம்

ரியல் ஹீரோவான அமைச்சர் விஜயபாஸ்கருக்கு க்ரேட் சல்யூட்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனோ வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக அரசு பல  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்த உடனேயே களத்தில் இறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்  மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டு அங்கு இருக்கக்கூடிய சுகாதார பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி நிலைமையை சீராக கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

அதேபோல கொரோனா வைரஸின் தீவிரம் உணரப்பட்டவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய விமான நிலையங்களில் வரக்கூடிய பயணிகளுக்கு என்னென்ன சோதனைகள் செய்யப்படுகின்றன என்பது குறித்தும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தாரனர்.

ALSO READ  38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள் - சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்தும் எந்த இடத்திலிருந்து அவர்கள் வருகை தந்தார்கள், அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் வீணாக பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா வைஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் அவர்களுடைய ரத்தப் பரிசோதனை முடிவுகள் குறித்தும் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ALSO READ  விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய திமுக:

அதேபோல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தார்.

இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும் என்கின்ற நிலை இருக்கிறது. ஆகையால் சமூக வலைத்தளங்களிலும் தோன்றி கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக கைகளை எப்படி கழுவ வேண்டும் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தமிழகத்தைப் பொருத்தவரை எத்தனை பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது எத்தனை பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள் எத்தனை பேருக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற விவரங்களை நாள் வாரியாக தன்னுடைய தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னை தனிமைப்படுத்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் தன்னுடைய வேலையை தொடர்ந்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு சொன்ன அறிவுரைகளை தானும் பின்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக தகவல்களை பதிவிடுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் ஆகிய நம்முடைய பங்கும் இருந்தால் தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த முடியும்.

ரியல் ஹீரோக்களை போற்றி வணங்கும் சமூகத்தில் தற்போது களத்தில் பணியாற்றும் நிஜ ஹீரோவான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஒரு கிரேட் சல்யூட். அரசோடு இணைந்து பணியாற்றி கொரோனாவை கட்டுப்படுத்த உறுதியேற்போம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குனரும் நடிகருமான விசு காலமானார்….

naveen santhakumar

ஸ்டெர்லைட் ஆலை திறப்பை  எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 

News Editor

முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு கொரோனா பரிசோதனை ! 

News Editor