உலகம்

கொரோனா அச்சம்.. தன்னை தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதிலும் கொரோனோ வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகள் தங்கள் எல்லையை மூடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலக நாடுகளில் பல பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்கல் அண்மையில் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த தடுப்பூசியை போட்ட மருத்துவர் தற்பொழுது கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ALSO READ  அண்டார்டிக்காவிலும் நுழைந்த கொரோனா வைரஸ்...!

இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் தனக்கு ஊசி போட்டதால் தனக்கும் ஒரு பாதிப்பு இருக்கலாம் என்று ஜெர்மனி அதிபர் கருதியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் முக்கிய பணிகள் அனைத்தையும் வீட்டிலிருந்தே அதிபர் மேற்கொள்வார் என்று ஜெர்மனி நாட்டின் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஜெர்மனியை பொறுத்தவரை இதுவரை 24,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90-க்கும் அதிகமானோர் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மலையக தமிழர்களின் தலைவன் ஆறுமுகன் தொண்டமான்.. சரித்திரமும், சாதனையும்..

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் ஆயிரக்கணக்கான நாய் மற்றும் பூனைகள் கருணை கொலை செய்யப்படும் அபாயம்….

naveen santhakumar

கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

Admin

ஒலிம்பிக் தடையில் இருந்து தப்பித்தது : நைக் நிறுவனத்தின் Vaporfly ஹூக்கள்

Admin