தமிழகம்

கொரோனா – ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கே ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்துள்ளார்.

Putin orders nonwork week as COVID-19 numbers rise in Russia - The Hindu

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24.27 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் உள்ளதால், தற்போது வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  3 லட்சம் மாத்திரைகள், 2000 சானிடைசர், 10 ஆயிரம்மாஸ்க்; கொரோனாவிலிருந்து விடுபட சாய்பாபாவுக்கு அலங்காரம்!

மேலும், ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்துள்ளார்.

ALSO READ  பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? - மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி விளக்கம்..!
The Russian economy in health, oil, and economic crisis - Atlantic Council

அதன்படி, ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,25,325 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“இந்தியாவுக்கே வழிகாட்டும் புதுமைப் பெண் திட்டம்” – அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!

Shanthi

இன்னும் சற்று நேரத்தில் அதிரடி அறிவிப்பு… முதல்வர் தீவிர ஆலோசனை!

naveen santhakumar

உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் – 4 பேர் கைது

naveen santhakumar