தமிழகம்

தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தின் 30வது புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றுக் கொண்டார்.

தற்போது டிஜிபியாக உள்ள திரிபாதி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு (ரயில்வே), கரன்சின்ஹா (தீயணைப்புத்துறை), சஞ்சய்குமார் (எல்லை பாதுகாப்பு படை) ஆகியோரது பெயர்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. பரிசீலனைக்கு பின்பு தமிழக அரசு, சைலேந்திரபாபுவை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து உத்தரவிட்டது.

இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் தமிழகத்தின் 30வது புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ALSO READ  ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமனம்
C. Sylendra Babu - Wikipedia

முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும் என்பதோடு மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தோட்டத்தில் கருகும் பூக்கள்; கவலையில் விவசாயிகள் !

News Editor

டெல்டா பிளஸ் கொரோனா மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்…!

naveen santhakumar

மோடி பொங்கல் ரத்து…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar