தமிழகம்

மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…..எவற்றிற்கெல்லாம் அனுமதி???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் 100% சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் இனி முழு பொதுமுடக்கம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று கடைபிடிக்கப்படும் பொது முடக்கமே கடைசி ஆகும்.

சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

சென்னையிலும் 1-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி. அப்போது கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்கலாம்.

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் மாவட்டங்கள் இடையே செல்ல இ-பாஸ் தேவையில்லை என அரசு கூறியுள்ளது.

ALSO READ  தனது மகளை காண்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது மூதாட்டி....

வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வருவோர்கள் மட்டுமே இ-பாஸ் எடுத்துவரவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

News Editor

சென்னை கோட்டூர்புரத்தில் 15 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Admin

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி- “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றம்!

News Editor