தமிழகம்

தமிழகமே பரபரப்பு… நாளை முதல் இரவு நேர ஊரடங்கு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. உலக அளவில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து,

உலக இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மாநிலங்களில் புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம், புது டெல்லி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து 3.1.2022 அன்று 1728 ஆக உள்ளது.

ALSO READ  கேரளா- கொரோனாவே ஓயவில்லை அதற்குள் ஜிகா வைரஸ்?

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கொரோனா மேலாண்மைக் குழுவின் தலைவர் பூர்ணலிங்கம், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் மாநிலம் முழுவதும் நாளை முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

naveen santhakumar

சர்ச்சையை ஏற்படுத்தியதா நடிகை ஜோதிகாவின் பேச்சு? அப்படி என்ன‌ பேசினார்?….

naveen santhakumar

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘All Pass’ பள்ளிக்கல்வித்துறை அதிரடி ……

naveen santhakumar