தமிழகம்

நாசா விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் திருச்சி மாணவி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:-

திருச்சி  உறையூர் பத்திமா நகரை சேர்ந்தவர் காயத்ரி. இவர் திருச்சியில் உள்ள கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் (E.C.E) இறுதியாண்டு படித்து வருகிறார். 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் ஆஸ்ட்ரோ நெட் மற்றும் கோ 4 குரு ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்திய தகுதித் தேர்வில் சிறந்த திறனாளராக  தேர்வாகியுள்ளார். 

கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த தேர்வில் கிரேட்டின் அடிப்படையில்  2ம் இடத்தையும் பிடித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்குத் தேர்வாகியுள்ளார். 

இதன் மூலம் இவர் வரும் ஜூன் மாதம் நாசாவில் நடைபெறவுள்ள உலகளாவிய விண்வெளி அறிவியல் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். 

ALSO READ  எனது மகனை எனது மனைவியோடு சேர்ப்பித்தால் 10 லட்சம் பரிசு- தொழிலதிபர் அறிவிப்பு..

நாசா செல்ல இவருக்கு போதிய வசதி இல்லாத நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ரூ.75,000 நிதியுதவி அளித்துள்ளார். அத்துடன் நாசா செல்ல நிதியுதவி கேட்டு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

நாசாவில் நடைபெறும் சா்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் காயத்ரி பங்கேற்கிறாா். இத்தோ்வில் தேர்ச்சி பெற்றால், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விண்வெளி துறைசார்ந்த பட்ட மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெறுவார். இதற்கான கல்விக் கட்டணம் முழுவதையும் நாசா மையமே ஏற்றுக்கொள்ளும். இதில் நிச்சயம் தேர்ச்சி பெற்று, இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை சேர்ப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் காயத்ரி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செப்டம்பர்-1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்

Shobika

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

வேலூரில் மீண்டும், மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

naveen santhakumar