தமிழகம்

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

krishnagiri vaccine new restrictions: 4.20 லட்சம் பேர் வெளியே வரத் தடை...  கிருஷ்ணகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு - krishnagiri collector jayachandra  bhanu reddy announced un vaccinated person not ...

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல், கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

மேலும், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

ALSO READ  ‘தமிழ்ச்சாலை’ செயலியைப் பயன்படுத்துங்கள்: அமைச்சா் க.பாண்டியராஜன்...

இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனாவை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தாத 10,86,500 பேர் பொது இடங்களாக உள்ள 18 இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  பயணிகள் கவனத்திற்கு… இனி ரயிலில் பயணம் செய்ய இது கட்டாயம்!

பொது இடங்களுக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தியை காண்பிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடையை மீறி பொது இடத்துக்கு வந்தால் அபராதம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி- “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றம்!

News Editor

பீகார் முதல்வரின் தமிழக பயணம் ரத்து.!

Shanthi

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் ? முதல்வர் இன்று ஆலோசனை

naveen santhakumar