இந்தியா தமிழகம்

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடையம் நிலையில் , 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை ஜூன் 2ஆம் வாரம் வரை நடைபெற இருப்பதன் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ALSO READ  அசத்தும் தமிழர்கள்..!!!உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் வரிசையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விஞ்ஞானிகள்…..

மேலும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமாவதன் காரணமாக ஏற்படும் கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லே-லாடாக் எல்லையில் பதற்றம்; இந்தியா -சீனா படை குவிப்பு…

naveen santhakumar

இருசக்கர வாகனங்களில் வீடுகள் தேடி இலவச ஆக்ஸிஜன் சேவை !

News Editor

Pin Up 2024 İncelemesi: On Line Casino Ve Bahis, Uygulama Özellikleri, Güvenilirlik, Promosyon Kodu Ve Added Bonus

Shobika