தமிழகம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5% ஒதுக்கீடு கோரி மனு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் தமிழில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, தர்மபுரி மாவட்டம் ஹரூர் பெரியார் நகரை சேர்ந்த என்.முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5% ஒதுக்கீடு கோரி மனு...! அரசு பதிலளிக்க உத்தரவு

அந்த மனுவில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும், 5400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பட்டாசு ஆலையில் தீ விபத்து…. 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு…..

நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ் வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையயும், நலனையும் பாதுகாக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 தேதிகளில் தமிழக முதல்வர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா!

Shanthi

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் பலி – முதல்வர் இரங்கல்

naveen santhakumar

திமுக ஆட்சி குறித்து ஆறு மாதத்திற்கு பின்பு தான் பேச முடியும் – அண்ணாமலை

News Editor