சினிமா தமிழகம்

முதன் முறையாக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள்… சூரரைப்போற்று பாடல் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா , அவரின் தந்தை சிவகுமார், மோகன் பாபு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் 2 வது பாடலான ‘வெய்யோன் சில்லி’ (Veiyon chilli) என்ற பாடலை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் வெளியிட படக்குழு தீர்மானித்திருந்தது.

ALSO READ  ஏழு ஸ்வரங்களின் இடைவெளி எட்டு.

ஆதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் இன்று விமானத்தில் வெளியானது.

இதற்காக 100 அரசுப் பள்ளி கமாணவர்கள் இன்று இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்கள். இவர்கள் அனைவருமே முதல் முறையாக விமானம் பயணம் மேற்கொண்டனர். விமான பயணம் மாணவர்களின் முகத்தில் பெருமளவில் மகிழச்சியை கொடுத்தது.

ALSO READ  ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா…

படக்குழுவினர் நடத்திய ‘தங்களுடைய மிகப்பெரிய கனவு’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி தேர்வான 100 மாணவர்கள் இந்த விமான பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தப் படத்திற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் போயிங் 737 ரக விமானத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’ திரைப்படம் !

News Editor

முதல் முறையாக எழுத்தாளருக்கு அரசு மரியாதை; 30 குண்டுகள் முழங்க கி.ராவின் உடல் நல்லடக்கம் !

News Editor

“உன் விழிகளில் விழுந்த நாள் முதல்” – நடிகை சிருஷ்டி டங்கே புகைப்பட தொகுப்பு

Admin