உலகம் தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு ரோபோக்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

இந்த ரோபோக்களை ஷென்ஸென்-னை (Shenzhen) சேர்ந்த புடு டெக்னாலஜி (Pudu Technologies co) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

வைரஸ் பாதித்தவர்களை பார்க்க செல்லும் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் உள்ள கொரோனா பாதித்தவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இந்த ரோபோக்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.

ALSO READ  கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை....

நோயாளிகள் உள்ள அறைகளுக்கு செல்லும் ரோபோ அவர்களின் அறை எண்ணையும் அவர்களின் பெயரையும் சொல்லி அழைக்கிறது.

அவர்கள் வெளியே வந்தவுடன் இந்த ரோபோ அதன் எந்த அடுக்குகில் அவர்களது உணவு உள்ளது என்பதையும் கூறுகிறது.

ALSO READ  கொரோனாவால் கேரளாவில் முதல் மரணம்…

உணவை எடுத்த பின்னர் ‘Finish’ பட்டனை அழுத்த சொல்கிறது. அவர்கள் அழுத்தியவுடன் அங்கிருந்து மற்ற அறைகளுக்குச் செல்கிறது ரோபோ. அத்தோடு ‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ என்றும் கூறுகின்றன இந்த ரோபோக்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லெபனான் குண்டுவெடிப்பின் பின்னணி… 

naveen santhakumar

தென் ஆப்பிரிக்க வரலாற்றில் முதன்முதலாக சிறைக்கு செல்லும் அதிபர் :

Shobika

மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலுக்கான டீசர் :

Shobika