உலகம்

கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரஸ்ஸல்ஸ்:-

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மனித வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் மனிதர்களை தவிர உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நன்மையே விளைந்துள்ளது என்று கூறலாம்.

உலகின் பெரும்பாலான நாடுகள் முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் முடங்கியுள்ளது,  மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லை. இதன் காரணமாக காற்றின் மாசு பெருமளவு குறைந்துள்ளது.

தற்பொழுது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்-ல் உள்ள ராயல் அப்சர்வேட்டரி (Royal Observatory) விஞ்ஞானிகள் பூமியின் நில அதிர்வு சற்று மட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஓடுகள் நகர்வு காரணமாக புவி அதிர்வுகள் ஏற்படும், அதே சமயம் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் இவற்றில் இருந்து ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் மெல்லிய அளவில் பூமியில் அதிர்வுகள் ஏற்படும் தற்பொழுது அவை முற்றிலுமாக குறைந்துள்ளது.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

முன்னர் புவியில் ஏற்படும் லேசான நில அதிர்வுகளை விஞ்ஞானிகள் கணிக்க முடியாமல் தவித்தனர். ஏனெனில் பூமியின் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அந்த மெல்லிய அதிர்வுகளை கண்காணிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

ஆனால் தற்பொழுது லேசான நில அதிர்வுகள் மற்றும் எரிமலையின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிப்பது சுலபமாக உள்ளது.

ALSO READ  டெல்லியில் நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்-பொதுமக்கள் அச்சம்.. 

இதேபோல் பிரிட்டிஷ் ஜியோலாஜிக்கல் (British Geological Survey) சர்வே M4 என்ற முக்கிய நெடுஞ்சாலையில் கண்காணித்ததில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது காரணமாக பெருமளவில் நில அதிர்வுகள் குறைந்துள்ளதாக கூறியுள்ளது.

மனித உயிரிழப்புகள் பொருளாதார சரிவுகள் என்று ஒருபுறம் கொரோனூ வைரஸால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் மறுபுறம் வாகனப் போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் முடக்கம் ஆகியவற்றின் காரணமாக பூமி அதிர்வுகள் பெருமளவு குறைந்துள்ளது இதன் காரணமாக பூமியின் நகர்வை முற்றிலுமாக மாறி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சானிக் ஆயுதங்கள் கடற்படையில் சேர்ப்படுவதாக புதின் அறிவிப்பு…. 

naveen santhakumar

இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!

Admin

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு….4 பேர் பலி …3 பேர் படுகாயம்….

Shobika