தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் மீண்டும் அம்பாசிடர் கார் … எப்படி இருக்கும் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாகன சந்தையில் மிகவும் பிரபலமான அம்பாசிடர் மீண்டும் புதிய வடிவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆக்கிரமித்த அம்பாசிடர்,மாருதி 800 கார்களின் உற்பத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. என்னதான் புதிய கார்களின் வருகை தொடர்ந்து அதிகரித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது அம்பாசிடர் கார்.

1954 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த லேண்ட் மாஸ்டர் என்ற காரை பிற்காலத்தில் அம்பாசிடராக பெயர் மாற்றம் செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.

ALSO READ  Youtube ட்ரெண்டிங்கில் 'ஜெய் சுல்தான்' பாடல்..! 

2000ம் ஆண்டு வரை முக்கிய பிரமுகர்களின் விருப்பமான வாகனமாக இருந்த அம்பாசிடரின் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் 2014 ஆம் ஆண்டு வாகன சந்தையிலிருந்து இந்த கார் மாடல் நீக்கப்பட்டது.

இந்நிலையில் பிரெஞ்ச் கார் உற்பத்தி நிறுவனமான பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் காரை உரிமையை வாங்கி உள்ளது. இதன்மூலம் அம்பாசிடர் கார் மீண்டும் புதிய வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் ஆக உள்ளது. அது குறித்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவர்ச்சிகரமான விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்:

naveen santhakumar

விரைவில் இந்தியாவை கலக்கவரும் டாமினர் 400 ஸ்பெஷல் எடிஷன் :

Shobika

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin