தொழில்நுட்பம்

இந்தியாவில் அதிரடியாக விலையை உயர்த்திய அவெஞ்சர் சீரிஸ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் சீரிஸ் மோட்டர் சைக்கிள் மாடல்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. அதன்படி அவெஞ்சர் குரூயிஸ் 220 மாடல் புதிய விலை ரூ. 1,24,635 ஆகவும் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடல் விலை ரூ. 1,02,592 என மாறி இருக்கிறது. முன்னதாக இரு மாடல்களின் விலை முறையே ரூ. 1,22,630 என்றும் ரூ. 1,02,592 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விலை உயர்வு தவிர இரு மோட்டார் சைக்கிள்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ALSO READ  மொபைல் போனில் நம் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்:

அவெஞ்சர் 220 குரூயிஸ் மாடலில் 220சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 18.76 பிஹெச்பி பவர், 17.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 14.79 பிஹெச்பி பவர், 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

அவெஞ்சர் சீரிஸ் மட்டுமின்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர், டாமினர் சீரிஸ், பிளாட்டினா 100, பிளாட்டினா 110 ஹெச், சிடி100 மற்றும் சிடி 110 போன்ற மாடல்களின் விலையையும் உயர்த்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை நிறுத்தம் :

Shobika

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

Admin

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Admin