ஃபேஸ்புக் நிறுவனம் ஆப்பிள் கடிகாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளை உருவாக்கும் பிரிவான New Product Experimentation (NPE) பிரிவு புதிய செயலி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலின் பெயர் KIT (KEEP IN TOUCH).
இந்த செயலியை தரவிறக்கம் செய்து க்யூ ஆர் கோடு அல்லது fb.com/devices இந்த லிங்க் வழியாக உள்நுழைந்து உங்களது மெசேஞ்சரை ஆப்பிள் கைகடிகாரத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.
இதன் மூலமாக குரல் வழி செய்திகள் குறுஞ்செய்திகள் லொகேஷன் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.
New Product Experimentation முன்னரே இதுபோன்ற பல்வேறு செயலிகளை உருவாக்கி உள்ளது.
இதை உருவாக்கிய வேறு சில செயலிகள் Whale என்பது memesகளை உருவாக்க உருவாக்கப்பட்ட செயலி, Bump – a conversational app, Aux என்பது இசைக்கான ஒரு செயலி, Hobbi- வீடியோக்களுக்கு காக உருவாக்கப்பட்ட செயலி, Tuned ஜோடிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக செயலி.