தொழில்நுட்பம்

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் இணையத்தில் லீக் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் அறிவித்தது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. எனினும், ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்களை அந்நிறுவனம் அப்போது வெளியிடவில்லை.

இணையத்தில் லீக் ஆன ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

தற்போது ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் மென்பொருள் மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LS-5701-J எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் டுயோ-கோ செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் கேமரா கோ புது வேரியண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கேமராவுடன் ஸ்னாப்சாட் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதை கொண்டு இந்தியாவுக்கான ஸ்னாப்சாட் லென்ஸ்களை பயன்படுத்த முடியும்.

ALSO READ  உங்க ஃபோன்ல நெட் ஸ்லோவா??????வேகத்த அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க…..
Reliance JioPhone Next to launch on September 10: India price, features and  everything we know

மற்ற அம்சங்களை பொருத்தவரை HD+ 1440×720 பிக்சல் ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர், டூயல் சிம், டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 MB ஆம்னிவிஷன், 8 MB செல்பி கேமரா, கேலக்ஸிகோர் GC34W சென்சார் வழங்கப்படுகிறது.

 ஜியோபோன் நெக்ஸ்ட்

இந்த ஸ்மார்ட்போன் 2 GB அல்லது 3 GB ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டாக்டர்

Admin

மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியீடு :

Shobika

இந்திய சந்தையில் மீண்டும் அம்பாசிடர் கார் … எப்படி இருக்கும் தெரியுமா?

Admin