தொழில்நுட்பம்

ட்விட்டரில் tweet செய்ய இனி இன்டர்நெட் தேவையில்லை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்டர்நெட் இல்லாமல் ட்விட்டரில் ட்விட் செய்யும் புதிய முறை முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.சமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்று டிவிட்டர் வலைத்தளம். சமூகத்தில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளை வைரலாக்குவதில் ட்விட்டரின் பங்கு அதிகம். இதில் பதிவிடப்படும் ஹேஸ்டேக்குகள் மட்டுமே அந்த நிகழ்வை உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்து விடும். அதனால் தான் பிரபலங்கள் அனைவரும் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் ட்விட்டர் வலைதளத்தை இன்டர்நெட் இல்லாமல் நம்மால் பயன்படுத்த முடியாது.

ALSO READ  குறைந்த விலையில் கேமிங் ஹெட்போன் :

ஆனால் தொழில்நுட்ப மாற்றத்தால் தற்போது மொபைல் நம்பர் மூலமாக இண்டர்நெட் இல்லாமலேயே நாம் இதில் ட்விட் செய்யலாம். முதலில் நீங்கள் பயன்படுத்தும் ட்விட்டர் கணக்கோடு உங்களது மொபைல் நம்பர் இணைக்க வேண்டும். அதன்பிறகு இன்டர்நெட் இல்லாத சமயங்களில் மொபைலில் இருந்து 9248948837 என்கிற எண்ணுக்கு நாம் ட்விட்டரில் என்ன பதிவிட விரும்புகிறோமோ அதனை டைப் செய்து மெசெஜ் செய்தால் போதும். அது தானாகவே நம் அக்கவுண்டில் ட்விட்டாக பதிவாகும்.ஆனால் இந்த வசதி நீங்கள் ட்விட்டரில் எந்த நம்பரை இணைத்துள்ளீர்களோ அதில் மட்டுமே ட்விட் செய்ய முடியும். அதுவும் இன்டர்நெட் இல்லாத இடங்களில் மட்டுமே பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி இந்த இலவசத்தை கூகிள் வழங்காது :

Shobika

வருகிறது வாட்ஸ் அப்-பே….இனி வாட்ஸ் அப் வழியே பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம்…..

naveen santhakumar

நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

Admin