சுற்றுலா

உலகிலேயே 11 பேர் மட்டுமே இருக்கும் நாடு தெரியுமா???. தெரிஞ்சா ஆச்சர்யபடுவிங்க..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தவோலாரா என்பது உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும் .

இத்தாலியின் சர்டீனியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு நாடாகும். இதன் மக்கள் தொகை வெறும் 11 பேர் ஆகும் .

இதன் பரப்பளவு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டும் ஆகும். தவோலாரா இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் பல உலக நாடுகள் இதை நாடாக அங்கீகரிக்கவே இல்லை.

இந்த நாட்டின் அரசர் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி என்பவர் ஆவார் .

இவரை எந்த வித முன்னனுமதியும்மின்றி பார்த்து விடலாம். ஏனெனில் அவ்வளவு எளிமையானவர் .அங்குள்ள ஒரே ஒரு உணவு விடுதிக்கும் உரிமையாளர் ஆவார் .

ALSO READ  உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..!

மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் அவர் படகோட்டியாகவும் வாழ்ந்து வருகிறார் .

தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறியதாக இருந்தாலும் தன் நாட்டைப் பற்றி பெருமை படுகிறார்.
“எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது” என்கின்றனர்.

ALSO READ  வரலாறு: மன்னர் காலத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்

இந்த நாட்டில் உள்ள 11 பேரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார் .

உலகிலேயே இங்கு தான் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகள் உள்ளன.

இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது. சர்டீனியாவின் ராஜா கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்கவும், வேட்டையாடவும் தவோலாரா தீவுக்கு வருகைபுரிந்தார். இவர் தான் தற்போது தீவில் உள்ள அரசர் அந்தோனியோவின் முன்னோருக்கு தீவை சாசனம் எழுதி கொடுத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

Shanthi

நடு இரவில் உதிக்கும் சூரியன்.. சிறைக்கைதிகளுக்கு Internet.. எந்த நாடு தெரியுமா?

News Editor

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin