உலகம்

அமெரிக்காவை கலக்கிய தமிழ் பாடல்.!!! மேடையை கலக்கிய இளைஞர்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா:-

அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான America’s got talent உலக புகழ்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சாதனையாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இதில் நடனமாடுவது, பாடுவது, மாயா ஜால தந்திரங்கள் செய்வது என பல்வேறு வியக்கவைக்கும் திறமைகளை இம்மேடையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை மிகப் பெரிய கௌரவமாக கருதுவதால் கலைஞர்கள் பலர் இதற்காக கடுமையான போட்டிகளையும் கடந்து இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த America’s got talent-ன் 14வது சீசனில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த we unbeatable என்ற நடன குழு ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற ‘மாஸு மரணம்’ பாடலுக்கு அசத்தலாக நடனத்தை வெளிப்படுத்தி உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ALSO READ  இத்தாலி தேசத்தில் ஒரு வாளிக்காக நடைபெற்ற சண்டையில் இரண்டாயிரம் பேர் உயிரிழப்பு… 

அரங்கில் இருந்தவர்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த we unbeatable நடன குழுவிற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து பணிக்காக வெளியேறி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் ஊழியர்களைக் கொண்டது இந்த we unbeatable நடன குழு.

ALSO READ  ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்:

இதை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

நிகழ்ச்சியில் we unbeatable பங்கேற்ற காட்சிகளை இணையதளத்தில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச புலிகள் தினம் இன்று….

News Editor

லாட்டரியில் கிடைத்த 700 கோடி… ஜெர்மானியருக்கு நேர்ந்த சிக்கல்

Admin

அமெரிக்காவில் புலிக்கும் கொரோனா வைரஸ்…..

naveen santhakumar