உலகம்

பில்கேட்ஸ்-க்காக 4600 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட சொகுசு கப்பல்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக டாப் பணக்காரர்கள் வரிசையில் 2து உள்ளவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

இவர் தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத முழுவதும் திரவ ஹைட்ரஜன் இயங்கக்கூடிய சொகுசு கப்பல் ஒன்றை வாங்க உள்ளார். இதன் மதிப்பு 644 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (USD). இது இந்திய மதிப்பில் சுமார் 4,500 கோடி ரூபாய்.

சினாட் (SINOT) என்ற டச்சு நிறுவனம் இந்த கப்பலை வடிவமைக்கிறது. கடந்த ஆண்டு மொனாக்கோ நகரில் நடைபெற்ற கண்காட்சியில் இந்த திரவ ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த கப்பலை அறிமுகம் செய்தது.

ALSO READ  தண்ணீர் இல்லாத கழிவறையை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்
Monaco Yatch Show 2019.

அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ள, இதில் ஐந்து தளங்கள் உள்ளது. 14 விருந்தினர்கள் மற்றும் 31 கப்பல் பணியாளர்கள் இதில் பயணிக்கலாம். இந்த கப்பலில் இரண்டு விஐபி சூட்கள், ஒரு உரிமையாளர் மாடம், ஒரு கேப்டன் அறை உள்ளது. மேலும் இக்கப்பலில் ஒரு நீச்சல்குளம், அதிநவீன ஜிம், ஸ்பா மற்றும் ஹெலிபேட் வசதி உள்ளது.

இந்த கப்பல் மூவாயிரத்து 3750 நாட்டிக்கல் மைல் (Nautical mile) வரம்பில் மணிக்கு 17 நாட் (Knot) வேகத்தில் பயணிக்ககூடியது.

ALSO READ  'இந்தியாவின் தலைமையை பார்க்க சிறப்பாக இருக்கிறது' : பில்கேட்ஸ் கருத்து !

எரிபொருள் கலன்களுக்கு ஆற்றலை வழங்க திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக இந்த கப்பலில் பயன்படுத்தப்படும்.
இந்தக் கப்பலின் தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது வடிவமைப்பிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எரிபொருள் கலங்களுக்கு திரவ ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது சற்று சவாலான பணி என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது முழுதும் திரவ ஹைட்ரஜனால் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

எனினும் இந்தக் கப்பல் 2024 ஆம் ஆண்டு தான் தயாராகும் என்று சினாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்…

naveen santhakumar

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

naveen santhakumar

அதிர்ச்சி…!!!!!! அதிபர் ஜோ பைடன் பதவியேற்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா…..

naveen santhakumar