உலகம்

வானியல் ஆய்வாளர்கள் சூரியன் மற்றும் பூமியின் பிரதி பிம்பத்தைப் கண்டறிந்துள்ளனர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெர்மனியை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் போன்ற நட்சத்திரத்தையும் பூமியை போன்ற மற்றொரு கிரகத்தையும் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளனர். 

இதுவரையில் நமது சூரிய குடும்பத்தில் இருப்பதைப் போன்று ஏறத்தாழ நான்காயிரம் கிரகங்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இதுவரை கண்டறிந்த கிரகங்களுள் KOI-456.04  என்ற கிரகம் கூடுதல் சிறப்பானது என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியின் அளவை விட இரண்டு மடங்கு குறைவாக உள்ள கிரகம் ஆகும். இதனுடைய நட்சத்திரம் Kepler-160 என்றழைக்கப்படுகிறது. 

இதனை காட்டிங்ஜென் (Göttingen)-ல்  உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டியூட் ஆஃப் சோலார் சிஸ்டம் ரிசர்ச் (Max Planck Institute for Solar System Research) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்த நட்சத்திரமானது கண்களுக்குப் புலனாக கூடிய ஒளியை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதே வேளையில் இது வெளியிடும் அகசிவப்பு கதிர் வீச்சுக்கள் (Infrared Radiation) சூரியனிலிருந்து வெளிப்படுவதை விட சிறியதாகவும் மங்கியதாகவும் உள்ளது. எனவே இந்த நட்சத்திரத்தை குள்ள நட்சத்திரமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் அதே வேளையில் அந்த Kepler-160 நட்சத்திரத்திடமிருந்து KOI-456.04 கிரகமானது சூரியனிலிருந்து பூமி பெரும் அதே அளவு ஒளியைப் பெறுகிறது. 

CoRoT, Kepler, TESS போன்ற வானியல் தொலைநோக்கிகள் மூலமாக இதுவரையில் விஞ்ஞானிகள் கடந்த 14 வருடங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கிரகங்களை கண்டறிந்துள்ளனர். இவர்கள் கண்டறியும்  கிரகங்கள் பெரும்பாலும் பெரிய அளவிலான வாயை கிரகங்கள் ஆகவே இருந்துள்ளது. ஒரு சில கிரகங்கள் மட்டுமே பூமியை ஒத்து அமைந்துள்ளது. மேலும் பூமியை போன்ற கடினமான மேற்பரப்பை கொண்ட வெகு சில கிரகங்களே இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளன. 

ALSO READ  பதிவியேற்பு விழாவிற்கு டிரம்புக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன் :

தற்போது கண்டறியப்பட்டுள்ள KOI-456.04 கிரகமானது கிட்டத்தட்ட பூமி சூரியனிலிருந்து அமைந்துள்ளதை போன்ற அதே வட்டப் பாதையில் அமைந்துள்ளது. மேலும் பூமியை போன்ற மேற்பரப்பையும் கொண்டுள்ளது. பொதுவாக கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஒளி ஆற்றல் மிகவும் இன்றியமையாதது. KOI-456.04 கிரகமானது பூமி பெரும் அதே அளவு ஒளியை பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே இங்கு உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம் உள்ளது.

KOI-456.04 கிரகமானது பூமியுடன் எந்த விஷயங்களில் எல்லாம் ஒத்துப் போகிறது என்பதை காணலாம். 

பூமியின் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள். KOI-456.04 கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 378 நாட்கள். ஏறத்தாழ பூமிக்கு சமமாக உள்ளது. 

ALSO READ  கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு - அரசு முடிவு?

கிட்டத்தட்ட பூமி சூரியனிலிருந்து பெரும் ஒளியைப் போன்று 93 சதவீத ஒளியை KOI-456.04 கிரகமானது அதன் நட்சத்திரத்தில் இருந்து பெறுகிறது. 

இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை +5° செல்சியஸ் அளவிற்கு உள்ளது.  பூமியின் சராசரி வெப்ப நிலையைவிட அதாவது தற்போதைய உலக சராசரி வெப்ப நிலையைவிட 10° செல்சியஸ் குறைவாக உள்ளது.

ஒரு சில விஷயங்களை எல்லாம் வைத்துப் பார்க்கையில் பூமியை போன்று இந்த கிரகமும் உயிரினங்கள் வசிக்க கூடிய சூழல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சரி, Kepler-160 நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் உள்ள வேறுபாடுகளை பார்க்கலாம்.

Kepler-160 ஆரமானது (Radius) சூரியனைவிட பத்து மடங்கு பெரிதாக உள்ளது.

Kepler-160 நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 5200 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளது. இது சூரியனை விட 300 டிகிரி செல்சியஸ் குறைவு.

இது சூரியனைப் போன்ற ஒளிர்வை (Luminosity) பெற்றுள்ளது.

மொத்தத்தில் விஞ்ஞானிகள் பூமியை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார்கள் போலும். ஏனெனில் நீண்ட காலமாக பூமிக்கு மாற்றாக மற்றொரு கிரகத்தை தான் தேடி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொய் சொல்லலாம்.. அதுக்குன்னு “கொரோனா வைரஸ்” பற்றி இப்படி சொல்லலாமா?

Admin

துப்பாக்கியுடன் நுழைந்த நபர் … ஹீரோவாக மாறிய இலங்கை தமிழர்

Admin

உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு..

Shanthi