உலகம்

உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் கனமழை பெய்து வருவதால் மலைப்பாங்கான பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோ நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கசேஸ் மாவட்டம் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது மிகவும் வாடிக்கையான ஒன்றே என்று கூறப்படுகிறது. தற்போது நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கும் தகவலை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் உகாண்டா நாட்டின் போலீஸ் தரப்பில் இது குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.


Share
ALSO READ  இந்தியாவுடனான மோதலில் இறந்த சீன வீரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டால் அரசுக்கு ஆபத்து... 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் நடந்த மகனின் இறுதி சடங்கை ஃபேஸ்புக் வழியாக பார்த்து கதறி அழுத பெற்றோர்….

naveen santhakumar

ஊரடங்கு காரணமாக 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்….

naveen santhakumar

போலீசிலிருந்து தப்ப நினைத்து தலைகீழாக அந்தரத்தில் தொங்கிய பெண்- CCTV காட்சிகள்…

naveen santhakumar