உலகம்

ராக்கெட் லாஞ்சர் மிஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் ஊரடங்கு எதிர்ப்பாளர்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வடக்கு கரோலினா:-

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும் பல்வேறு மாகாணங்களில் இந்த ஊரடங்கு உத்தரவுகள் எதுவும் முறையாக  பின்பற்றப்படுவதில்லை. உலகிலேயே மிக மோசமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்கா திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஊரடங்கிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த லாக் டவுன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வடக்கு கரோலினாவில் அதிநவீன ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வருகின்றனர் தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நமது நாட்டில்  எதிர்ப்புப் போராட்டங்களில் கற்கள், கம்பு, கட்டை உள்ளிட்டவற்றை ஆயுதங்களாக பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்கா நம்மைவிட வளர்ந்த நாடு ஆகையால் மிஷின் கன், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள்.

courtesy.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவில் சுத்தமாகவே ஊரடங்கு விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் ராலே (Raleigh) நகரிலுள்ள Fayetteville Street-ல் பிரபலமான சப்வே (Subway)  ரெஸ்டாரண்டில் நபரொருவர் AT4 Rocket Launcher-ஐ தோளில் சுமந்தபடி “Inert” (செயல் ஆற்றல் அற்ற) என்ற ஸ்டிக்கர் வேறு ஒட்டப்பட்டிருந்தது. இதைத் தவிர தனது இடுப்பில் இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்தார்.  இதனை News & Observer- செய்தி நிறுவனத்தின் நிருபர் ட்ராவிஸ் லாங் (Travis Long) புகைப்படம் எடுத்தார். 

ALSO READ  கனமழை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

மற்றொரு நபர் முகத்தில் ஸ்கார்ப் அணிந்து உள்ளார் அவர் ஒரு பம்ப் ஆக்சன் ஷாட் கன் (Pump Action Shot-Gun)-ஐ வைத்துள்ளார்.

சப்வே ரெஸ்டாரென்ட் இன் பென்சில் அமர்ந்துள்ள நபர் ஒருவர் தனது கையில் சாண்ட்விச் ஒன்றை வைத்துள்ளார். தனது முகத்தை மறைத்துள்ளார் அவரிடமும் ஒரு Shot-Gun  உள்ளது.

இந்த ரெஸ்டாரன்ட் ஊருக்கு வெளியே செல்பி எடுத்து கொண்டிருந்த நபரொருவர் மரத்தினாலான .50- கேலிபர் மிஷின் கன் (Wooden .50 Caliber Prop Machine Gun) வைத்துள்ளார். 

மொத்தமாக 11 ஆயுதம் தாங்கிய நபர்கள் இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தனர். இவர்கள் Blue Igloo  என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊரடங்கிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக இவ்வாறு இவர்கள் சுற்றி திரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ  வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்ணிற்கும் கொரோனா வைரஸ்...

கரோலினாவில் கடந்த சனிக்கிழமை முதல் முதல் கட்டமாக ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து  இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியபோது:-

நாங்கள் ஒன்றும் வன்முறையாளர்கள் அல்ல. நாங்கள் மிகவும் அமைதியானவர்கள். நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இவ்வாறு நடந்து கொண்டோம். நாங்கள் வன்முறை விரும்புவர்கள் அல்ல நாங்கள் சண்டை போடவும் வரவில்லை. சூரிய வெளிச்சத்தை காணவும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வெளியே வந்துள்ளோம். சுதந்திரத்தை  அனுபவிப்பதற்காக தான் வெளியே வந்துள்ளோம். மேலும் மக்களிடையே புன்னகையையும், நல்ல நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே இவ்வாறு செய்து வருகின்றோம் என்றனர்.

இவர்கள் இது போன்ற ஆயுதங்களைத் தாங்கி எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்தால் இவர்கள் மீது வழக்குப்பதிவு அல்லது கைது நடவடிக்கைகள் எதையும் போலீசார் எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹைதி அதிபர் கொலை…4 பேர் சுட்டுக்கொலை..2 பேர் கைது….

Shobika

நடுவரின் ஷூவை தொட்டதால் ஜோகோவிச்க்கு 20000 அமெரிக்க டாலர் அபராதம்

Admin

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை காலமானார்

naveen santhakumar