உலகம்

குற்றம் நிரூபிக்ப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 60 ஆண்டுகள் வரை சிறை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆங் சான் சூகி மீதான நான்கு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்தது.

இதில் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது, காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உள்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைநகர் நேபிடாவில் உள்ள கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

ALSO READ  அமெரிக்க அதிபரின் கொரோனா தொற்று குறித்து மோடி டுவீட்:

விசாரணைக்கு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதிவந்தபோது ஆங் சான் சூகிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்று ஆங் சான் சூகியின் வழக்கறிஞர் கின் மவுன்ஸா கூறியுள்ளார்.

இந்த வழக்குகளில் உள்ள நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் தலா 15 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 76 வயதான வயதான ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும், அவர் மியான்மார் நாட்டு மக்களின் விடுதலைக்காக 21 ஆண்டுகள் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெஞ்சமின் பிராங்கிளின் பட்டம் ஆய்வு மூலமாக மின்னோட்டத்தை கண்டறிந்தாரா…

naveen santhakumar

வேறு ஆணுடன் காதலியை கண்ட கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி…

naveen santhakumar

தனித்தீவில் குவியல் குவியலாக சடலங்கள் அடக்கம் செய்யப்படும் வீடியோ…..

naveen santhakumar