உலகம்

அமெரிக்க அதிபரின் கொரோனா தொற்று குறித்து மோடி டுவீட்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனாவில் இருந்து பூரணமாக  குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரம், கிளீவ்லேண்டில் நடந்த பிடன் உடனான விவாதம், மினசோட்டாவில் நடந்த பிரசார பேரணி ஆகியவற்றில் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் உடன் அதிபர் டிரம்ப் பயணித்ததார். இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ALSO READ  காதலிக்க பெண் தேவை… விதவிதமாக பேனர் வைத்த இளைஞர்

இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், “இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையை உடனடியாக தொடங்குகிறோம். இருவரும் இணைந்து இதனை எதிர்கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது நண்பரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் குணம் பெறவும், நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி

News Editor

கொரோனா வைரஸ் கண்டுபிடித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

Admin

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றடுத்த தாய் கொரோனாவால் உயிரிழந்த பரிதாபம்…

naveen santhakumar