உலகம்

பெஞ்சமின் பிராங்கிளின் பட்டம் ஆய்வு மூலமாக மின்னோட்டத்தை கண்டறிந்தாரா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க டாலர் நோட்டுகளில் ஒருவரை நாம் கண்டிருப்போம் அவர்தான் பெஞ்சமின் பிராங்கிளின். 

சரி, யார் இந்த பெஞ்சமின் பிராங்கிளின்..??

இவரைப் பற்றி நாம் நமது சிறுவயதில் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். ஒருநாள் மதியவேளையில் வானில் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1752ஆம் ஆண்டில் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். 

இடி, மின்னலுடன் கூடிய மழை நாளில் அவர் பட்டம் ஒன்றைப் பறக்கவிட்டார். அப்பட்டம் பட்டுத்துணியால் செய்யப்பட்டது; பட்டத்தின் மேலே வயர் ஒன்று பொருத்தப்பட்டு, அந்த வயரின் முனையோடு சாவி ஒன்று இணைக்கப்பட்டு அந்த சாவி லெய்டன் ஜாரோடு (Leyden Jar) இணைக்கப்பட்டிருந்தது. மின்னல் கீற்று பட்டத்தின் இரும்புக்கம்பியில் பட்டவுடன், கீழிருந்த அதிர்வு உண்டாயிற்று.

அந்த சாவி பெஞ்சமின் பிராங்கிளின் தொட்டபோது  அவருக்கு ஏற்பட்ட அதிர்வு மூலம் அம்மின்னல் கீற்றில் மின்சாரம் இருப்பது உறுதியாயனது; மேலும் மேகங்களில் இருக்கும் ஏராளமான மின்சாரத்தை கீழே தரைக்குக் கொண்டுவர இயலும் என்பதும் உணரப்பட்டது. எனவே மேகங்களின் மின்னாற்றலை கட்டடங்களுக்கு ஊறு நேராவண்ணம் தரைக்குக் கொண்டுவர இயலும் என்ற அடிப்படையில் மின்னல் கடத்தி அதாவது இடிதாங்கி உருவாக்கப்பட்டது. வரலாற்றில் இந்த சம்பவம் நடைபெற்ற நாள் இன்று 10 ஜூன் 1752. 

ALSO READ  மனித தொடர்புகளை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்தும் சிங்கப்பூர் அரசு....

இது நமது பாடங்களில் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு ஆனால் உண்மையில் பெஞ்சமின் பிராங்க்ளின் இதுபோன்ற ஒரு பட்டம் சோதனையை மேற்கொண்டாரா??

உண்மையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது பெஞ்சமின் பிராங்கிளின் பட்டம் மின்னலால் தாக்கப் படவில்லை. சுற்றுப்புறத்தில் இருந்த மின்னூட்டம் பட்டத்தின் முனையில் இருந்த வயர் மூலம்  கவரப்பட்டது. இதையடுத்து அவர் சாவியின் அருகே தனது விரலைக் கொண்டு செல்கையில் சாவியில் இருந்த எதிர் முனைகள் பெஞ்சமின் பிராங்கிளின் கை விரலில் இருந்த நேர் மின்னூட்டத்தை ஈர்த்தது இதன்மூலமாக பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மின்னோட்டத்தை உணர்ந்தார். இந்த ஆய்வுக்கு பெஞ்சமின் பிராங்கிளின் மகன் வில்லியம் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மீண்டும் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம்...

இதை வைத்து கட்டிடங்களை இடியில் இருந்து இடிதாங்கிகளின் மூலம் காக்கலாம் எனவும் கூர்மையான முனைகள் இருந்தால் இடியின் பொழுது கடத்தப்படும் மின்சாரத்தை அந்த கூர்மையான கம்பியே வாங்கிக்கொள்ளும் என சொன்னார். அதனால் பல கட்டிடங்கள் இடி தாக்குதலில் இருந்து தப்பித்தன .

முதன்முதலில் சந்தா கட்டி நூலகத்தில் சேரும் முறையை கொண்டு வந்ததும் இவரே; இவரின் கண்டுபிடிப்பை வைத்தே மால்துசின் பிரபலமான மக்கள் தொகை கொள்கை உருவானது. அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை ஜெபர்சன் உடன் இணைந்து தயாரித்தது இவரே, எத்தனையோ கண்டுப்பிடிப்புகளை அவர் கண்டறிந்திருந்தாலும் எதற்கும் காப்புரிமை பெற்றதில்லை. எல்லாமும் மக்களுக்கு போய் சேரவேண்டும் அதற்கு என் காப்புரிமைகள் தடையாக இருக்க கூடாது என பெருந்தன்மையாக சொன்னார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவலுக்கிடையே சர்வதேச கவனத்தை ஈர்த்த இலங்கை திருமணம்…

naveen santhakumar

சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

Admin

கொரோனா பீதியிலும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடும் இத்தாலி மக்கள்.!!!!

naveen santhakumar