உலகம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலிபோர்னியா

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜேக் டோர்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தந்து ராஜினாமா குறித்து தெரிவித்துள்ளார்.

ALSO READ  கிரீஸ் நாட்டில் திடீரென்று நிலநடுக்கம் :
Jack Dorsey steps down as Twitter CEO – Indian to become new CEO | Reading  Sexy
Jack Dorsey

அதில், நிறுவனத்தில் இணை நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர், துணை தலைவர் வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் வெளியேறுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

Twitter Founder Jack Dorsey Steps Down As CEO, Will Be Succeeded By Indian  Origin Parag Agarwal

புதிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். பராக் அகர்வால் 10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, பராக் அகர்வால் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான யாகூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏடி&டி ஆகியவற்றுடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவலுக்கு மத்தியில் தாக்க இருக்கும் 13 புயல்கள் -IMD தகவல்…..

naveen santhakumar

கம்போடியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இரண்டு விமானங்கள் தயார்…

naveen santhakumar

ஒரு நிமிடத்தில் உலக சாதனை ..!

News Editor