உலகம்

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்: 

உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், ‘H- 1B’ விசா வாயிலாக வெளிநாட்டு வல்லுநர்களை பணியமர்த்தியதாக, ‘ஃபேஸ்புக்(Facebook)’ நிறுவனம் மீது, அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பணிகளுக்கு, ‘H – 1B’ விசா மூலம், வெளிநாட்டு வல்லுநர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ள, அந்நாட்டு சட்டம் வழிவகை செய்கிறது.இதன்படி,6 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த விசா மூலம், அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.அவர்களில், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம், உள்நாட்டினருக்கு வழங்க வேண்டிய பணிகளை, இந்த விசா மூலம், வெளிநாட்டினருக்கு முறைகேடாக வழங்கியதாக அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

ALSO READ  தலீபான்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு :

அது தொடர்பான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,”கடந்த இரண்டு ஆண்டுகளாக,ஃபேஸ்புக் நிறுவனம், 2,600க்கும் அதிகமான பணியிடங்களில் தகுதியான உள்நாட்டினரை நியமிக்கவில்லை.அதற்கு பதிலாக, அந்த பணியிடங்களை தற்காலிக,விசா வைத்திருப்போருக்கு ஒதுக்கியுள்ளது.அத்தகையோருக்கு ‘பெர்ம்’ எனப்படும், நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் நடைமுறைப்படி, ‘கிரீன் கார்டு(green card)’ அல்லது நிரந்தர பணிக்கான அங்கீகாரத்தை, பேஸ்புக் வழங்கியுள்ளது.

அப்பணிக்கு சராசரியாக 1 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.எனவே பேஸ்புக் உள்நாட்டில் தகுதியுள்ளவர்கள் இருந்தும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது.சட்ட மீறலுக்காக, கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்”.என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிபர் பெயர இப்படியா மொழிபெயர்ப்பு பண்ணுவிங்க.. காற்றில் பறந்த ஃபேஸ்புக் மானம்..

Admin

சர்வதேச Midwife தினம்…

naveen santhakumar

அடுத்த ஷாக்: அமெரிக்காவில் அணிலுக்கு பிளேக் தொற்று…. 

naveen santhakumar