உலகம்

காபூலில் குருத்வாரா மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 சீக்கியர்கள் பலி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:-

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷோர் பஜார் பகுதியில் உள்ள குருத்வாராவில் இன்று காலை பயங்கர  ஆயுதங்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இன்று காலை150க்கும் மேற்பட்டோர் சீக்கியர்கள் அந்த குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டிருந்தனர், அங்கு திடீரென துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

போலீசார் மற்றும் ராணுவத்தினர் விரைந்து சென்று எதிர் தாக்குதல் நடத்தி 80 பேரை மீட்டனர் இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர் மீட்கப்பட்டவர்களில் 11 பேர் சிறுவர்கள் ஆவர்.

(Courtesy)மீட்கப்பட்ட சிறுவர்கள்.

ஆப்கானிஸ்தானில் வெறும் 300 சீக்கிய குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றது குறிப்பிடதக்கது.

ALSO READ  இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டி நியமனம் :

மத்திய காபூலில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.

காபூல் சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

ALSO READ  இளம் மனைவியை தோலை உரித்து கொன்ற சைக்கோ கணவன்.

சிறுபான்மை சமூகத்தின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்கள், குறிப்பாக கொரோனா தொற்று பரவிவரும் இந்த நேரத்தில், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கொடூரமான மனநிலையை பிரதிபலிக்கிறது. 

துணிச்சலான ஆப்கானிய பாதுகாப்புப் படைகளின் அர்பணிப்பும் மற்றும் ஆப்கானிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் முன்மாதிரியான தைரியம் ஆகியவற்றை நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டிற்கு அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்திய மக்கள், அரசு மற்றும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக நிற்போம் என கூறி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மக்கள் தவிப்பு……உலகம் முழுவதும் ஜி-மெயில்,கூகுள் டிரைவ்,யூடியூப்…போன்ற தளங்கள் பாதிப்பு….:

naveen santhakumar

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றய அதிர்ச்சி சம்பவம்..!

Admin

யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி?

naveen santhakumar