உலகம்

உலகின் மிகவும் வலிகள் நிறைந்த பணியை செய்து வருகிறோம்.. இங்கிலாந்து நர்ஸின் வேதனை பதிவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

இங்கிலாந்தில் புகழ்பெற்ற லண்டன் ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் (Royal Free Hospital) பணியாற்றி வரும் செவிலியர் ஒருவர் சமீபகாலமாக தாம் ஆற்றிவரும் பணி உலகின் மிகவும் வேதனை கூறியதாக மாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லண்டன் ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் ஜூனிடா நிட்லா (42) (Juanita Nittla) என்பவர் தலைமைச் செவிலியராக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார்.  தற்போது இவர் கூறியுள்ள செய்தி நம்மையெல்லாம் கலங்க வைத்துள்ளது.

நான் லண்டன் ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் 16 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். தற்பொழுது என்னால் அரிதாக எப்போதாவது தான் தூங்க முடிகிறது. மேலும் தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் வருகிறது. தற்போது நான் ஆற்றிவரும் பணி வலி நிறைந்ததாகவும், வேதனைக்குரியதாகவும் மாறியுள்ளது. நான் பணியாற்றும் இப்பிரிவில் நாளுக்குநாள் மரணங்கள் ஏற்படுவது மிகப் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் உயிரிழப்பிற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம் என்று தோன்றுகிறது.

எனவே, என்னால் தூங்கவே முடியவில்லை. நமக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல இங்கு வேலை செய்யும் மற்றவர்களுக்கும் எங்கே நமக்கும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுவிடுவமோ என  அச்சத்தில் உள்ளனர்.

ALSO READ  பாரீஸிற்கு சென்ற சீனப்பெண்… கொரோனோ வைரஸை பரப்பினாரா?

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் இனி இவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுவோரின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதே தற்பொழுது நிட்லாவின் பணியாக உள்ளது.

கடந்த வாரம் இவர் காலை பணியில் ஈடுபட்ட நாளை மறக்க முடியாது என்று கூறுகிறார். ஏனெனில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய 50 வயதுள்ள நர்ஸ் ஒருவரின் செயற்கை சுவாசத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நிட்லா தள்ளப்பட்டுள்ளார்.

வெண்டிலேட்டர் நிறுத்துவதற்க்கு முன்னால் அந்த பெண்மணியின் மகளுக்கு போன் செய்து பேசியுள்ளார், அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் குறித்தும் அவர்களது மத நம்பிக்கைகள் குறித்தும் கேட்டுள்ளார். மேலும் அவரது தாயார் வலியில் இல்லை என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக அந்த போனை அந்த நர்ஸின் காதில் வைத்துள்ளார். அவரது மகளுடன் பேச செய்துள்ளார். பின்னர் அவர்கள் குடும்பம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த நர்ஸுக்கு பிடித்தமான பாடல் ஒன்றையும் ஒலிக்க செய்துள்ளார் செய்துள்ளார்.

ALSO READ  செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.. 

வெண்டிலேட்டர் அணைத்துவிட்டு அந்த பெண்மணியின் அருகிலேயே அமர்ந்து உள்ளார் நிட்லா. அப்பொழுது அந்த இறக்கும் நிமிடங்கள் வரை நிலாவின் கைகளை இறுகப் பற்றி உள்ளார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது மகள் தொடர்ந்து போனில் அவருக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்துள்ளார். பின்னர் அந்தப் பெண்மணிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து அவரை முறைப்படி பிணப் பையில் அடைத்து அனுப்பியுள்ளார்கள்.

நிட்லா கடந்த வருடம் டியூபர்குளோசிஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவர் பணியாற்றிவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளில் எண்ணிக்கை 34 இல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மூன்று நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற வீதத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓமன் சுல்தான் காபூஸ் மறைவு- இந்தியா சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

Admin

அண்டார்டிகாவில் எங்கும் ரத்த பனி-இந்த விசித்திர நிகழ்வுக்கான காரணம் என்ன.???

naveen santhakumar

“தீயணைப்பு வீரராக மாறுவேடமிட்டு தீக்குளித்த நாடு, பாகிஸ்தான் ” -இந்தியா பதிலடி.

Admin