உலகம்

பொலிவியா அதிபர் ஜீனைன் அனெசுக்கு கொரோனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக உள்ள ஜீனைன் அனெசுக்கு (54) (Jeanine Anez) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே 14 தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக தென்னமெரிக்காவில் மிகப்பெரிய நாடான பிரேசிலின் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இரண்டாவது பொலிவியா அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  தன்னைத்தானே திருமணம் செய்த பெண் விவாகரத்துக்கு மறுப்பு; ரூ3 கோடி வரதட்சனையுடன் வந்த மாப்பிள்ளை…

இதேபோல மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அரசியல் அமைப்பு சபை தலைவர் (Constitutional Assembly President) டியோஸ்டாடோ கேபெல்லோ (Diosdado Cabello)-க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicholas Maduro) விற்கு அடுத்ததாக அந்நாட்டின் அதிகாரம் மிக்கவர் ஆவார்.

From Left Diosdado Cabello and Nicholas Maduro.

முன்னதாக, பொலிவிய நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட 7 அமைச்சர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ALSO READ  இந்தியாவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்.....

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னென்ன பண்றாங்க பாருங்க- காதல் ஜோடியின் Atrocity…!

naveen santhakumar

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: உதவிக்கரம் நீட்டும் வீரர்கள்

Admin

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை……

naveen santhakumar