உலகம்

பருவநிலை மாற்றத்தால் ஆபத்தின் விளிம்பில் குழந்தைகள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக நாடுகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தடுக்க தவறியதால், ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஐ.நா. அளித்த அறிக்கையின் படி, உலகெங்கிலும் காலநிலை மாற்றம், இடம்பெயரும் மக்கள் தொகை, மோதல், சுற்றுச்சூழல் சீரழிவு, வணிக நடைமுறைகள் ஆகியவை காரணமாக ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குழந்தையின் வளர்ச்சி , நிலைத்தன்மை மற்றும் சம பங்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும் ஒரு நாடு கூட சிறப்பாக செயல்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !

அதேசமயம் உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் மற்றும் மருத்துவ இதழ் தி லான்செட் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், ‘பணக்கார நாடுகளில் உள்ள குழந்தைகள் உயிர்வாழ்வதற்கும் நல்வாழ்விற்கும் சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது’ என்பதைக் கண்டறிந்துள்ளது.

இனியாவது பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கவனமாக எதிர்கொண்டு எதிர்கால சந்ததியினரின் வாழ்வை காக்க உலக நாடுகள் முயற்சிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் கடும் நிலநடுக்கம் :

Shobika

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து -4 பேர் உயிரிழப்பு

Shobika

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையான வீடியோவை எடுத்த பெண்ணுக்கு கிடைத்த பெரும் கவுரவம்…!

naveen santhakumar