உலகம்

அரபு உலகின் செவ்வாய் கிரகத்துக்கான முதல் நம்பிக்கை விண்கலம் வெற்றி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்:-

செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக முதல் விண்கலத்தை அனுப்பி ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சாதனை படைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அமால் (Al Amal) அல்லது நம்பிக்கை (Hope) என்கின்ற 1.3 டன் எடையுள்ள செவ்வாய் கிரகத்திற்கான முதல் விண்கலம், தெற்கு ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து (Tanegashima Space Centre) ஹெச்-2ஏ ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 6.58 மணிக்கு ) விண்ணில் ஏவப்பட்டது. 

ராக்கெட் ஏவப்பட்ட இதில் இருந்து சரியாக ஒரு மணி நேரம் கழித்து வெற்றிகரமாக விண்கலம் ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்தது இதனை தானேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கொண்டாடினார்கள். 

இந்த மார்ஸ் மிஷன் குறித்து ஐக்கிய அரபு அமீரக  துணை மேலாளர் சாரா அல் அமிரி (Sarah Al Amiri) கூறுகையில்:-

ALSO READ  வெளிநாட்டினர் வருவதற்கான தடை நீட்டிப்பு…! 

இந்தத் திட்டம் வெற்றி பெற்றது எங்களுக்கு  பேரானந்தம் கொண்ட உற்சாகத்தை (Rupturous Excitement) தருகிறது. இதுதான் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்காலம். இந்த உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றார். சாரா அல் அமிரி மேம்படுத்தபட்ட அறிவியல் அமைச்சக துறை மந்திரியும் ஆவார்.

ALSO READ  நாடு கொடுமையான சூழலை சந்தித்துள்ளது : சீன அதிபர் ஜி ஜின்பிங்

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3 திட்டங்களில் இது ஒன்றாகும்.  அமெரிக்காவில் இருந்து மார்ஸ் 2020 (Mars 2020) மற்றும் சீனாவிலிருந்து (Tianwen-1) என்ற இரண்டு திட்டங்கள் உள்ளது. 

இந்த விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு 7 அரபு நாடுகள் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் உருவானதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

News Editor

நேபாளத்தில் நிலநடுக்கம்….. ரிக்டர் 6.0 பதிவு:

naveen santhakumar

கொரோனா தடுப்பூசியை தயாரித்த ஜான்சன் & ஜான்சன்..

naveen santhakumar