இந்தியா உலகம் தமிழகம்

ஒரே மாதத்தில் 2-வது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமையல் எரிவாவு சிலிண்டர் விலை கடந்த மே 7 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது.

ALSO READ  பறக்கும் காரை அறிமுகப்படுத்த போகும் சென்னை நிறுவனம் :

இதற்கிடையே, 2022 பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததனால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த மார்ச் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மே மாதம் 7 ஆம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன்படி நேற்றுவரை சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று மேலும் ரூ. 3.50 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.1,018.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ALSO READ  மழை,வெள்ளம் - ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையும் ரூ.8 உயர்த்தப்பட்டதனால் உணவகங்களில் டீ, காபி, பஜ்ஜி, வடை தொடங்கி அனைத்து உணவுப் பண்டங்களின் விலையும் ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin

முடிவுக்கு வரும் விவசாயிகளின் போராட்டம்..!

News Editor

История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe

Shobika