உலகம்

பிடித்த பாடல்களை கேட்டபடியே உயிர்விட்ட கொரோனா பாதித்த பெண்.. மகள் கதறல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


லண்டன்:-

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வைரஸால் பாதிக்கப்பட்ட 51 வயதான பெண்மணி தனது கடைசி நிமிடங்களில் தனக்கு பிடித்தமான பாடலை கேட்டுவிட்டு இறந்திருக்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணி கே எல்மர் (51) (Kay Elmer). இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 95% அவருக்கு ஆக்சிஜன் (செயற்கை சுவாசம்) அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கருதி தன்னுடைய மகளுக்கு அவர் தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தான் உயிரிழக்க போவதாகவும் தனக்கு பிடித்தமான பாடலை தொலைபேசியில் ஒலிக்க விடுமாறு பரிதாபமாக கேட்டிருக்கிறார். 

ALSO READ  எல்லை தாண்டிய அதிகாரியின் உடலை எரித்த வடகொரியா:

இது குறித்து கூறிய  கே எல்மர்-ன் மகள் சோபியா எஸ்ஸல் (Sophia Essel):-

என் அம்மாவிற்கு டீனா டர்னர் (Tina Turner) பாடல்கள் மிகவும் பிடிக்கும் தன்னுடைய உயிர் பிரியும் நேரத்தில் அந்த பாடல்களை ஒலிக்க விடுமாறு என்னிடம் கூறினார் .

ALSO READ  கொரோனா பாதித்தவர்கள் வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் !
Tina Turner.

அவருடைய இறுதி மூச்சுவரை அவருக்கு பிடித்தமான அனைத்து பாடல்களையும் தாங்கள் ஒழிக்க விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார் சோபியா. பிரிட்டனில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும். ஊரடங்கு காரணமாக சோபியா அவருடைய சகோதரரும் தன் தாயின் இறுதி நேரங்களில் அவருடன் இருக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் இரண்டு பேருக்கு மேல் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்மர் குடும்பம்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

Admin

வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியுள்ள கோடீஸ்வரர்! -விற்பனையானது The Haunted House!

News Editor

நூற்றாண்டு பகைமையை மறந்த இரு பெரும் கட்சிகளின்: மைக்கேல் மார்ட்டின் பிரதமராக தேர்வு…

naveen santhakumar