உலகம்

வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியுள்ள கோடீஸ்வரர்! -விற்பனையானது The Haunted House!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கான்ஜூரிங் பட பிரபல பேய் வீட்டை கோடீஸ்வரர் ஒருவர் பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

கான்ஜூரிங் படத்த நம்மில் பெரும்பாலானவர்கள் பாத்திருப்போம், அந்த படத்தோட மையக் கருவே அந்த படத்துல வர்ற அந்த அமானுஷ்ய பங்களா தான்.

ஹாலிவுட் பேய் படங்களில் மிகவும் பிரபலமான படங்களில் முக்கியமானது கான்ஜூரிங். பல்வேறு அமானுஷ்ய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளியாகி வரும் இந்த படவரிசையின் முதல் பாகத்தை ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார். இந்த படம் ஹாலிவுட் அமானுஷ்ய படங்களின் திருப்புமுனையாக கருதப்படுகிறது.

ALSO READ  தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

அமெரிக்காவின் ரோட் தீவின் (Rhode Island) ஹாரிஸ்வில்லில் ரொம்பவே பிரபலமான Rhode Island farmhouse பேய் வீடு தான் அது. 1800களில் அந்த வீட்டில் பாத்ஷேபா ஷெர்மன்(Bathsheba Sherman) வசித்தார்.

1970களில், அங்கு பெரான்(Perron) குடும்பத்தினர் வாழ்ந்தனர். அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் The Conjuring திரைப்படம் எடுக்கப்பட்டது.

Bathsheba: the true story of "the spell"

இந்த பண்ணை வீட்டை கோரி மற்றும் ஜெனிபர் ஹெய்ன்ஜோன் (Cory and Jennifer Heinzon) ஆகியோர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கினர். அவர்கள் குறிப்பிட்ட அந்த பண்ணை வீட்டில் குடியேறிய 2 மாதங்களுக்கு பிறகு அந்த வீட்டில் நடந்த சில விசித்திர மற்றும் வினோத நிகழ்வுகளை பற்றி ஒரு உள்ளூர் செய்தி நிலையத்திற்கு தெரிவித்தனர்.

ALSO READ  பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு மூவர்ணக் கொடியுடன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்… 
Couple Bought House That Inspired 'the Conjuring,' Think It's Haunted

இப்போ சமீபத்தில் இந்த வீட்டை ஏலத்துக்கு விற்றனர். இந்த வீட்டை தொழிலதிபர் ஜென் ஹெய்ன்சன் என்பவர் இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 85 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்த வீட்டை புணரமைத்து சுற்றுலா தளமாக மாற்ற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் முதல் திருநங்கை பொம்மை

Admin

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்

Admin

கொரோனா குழப்பத்தை பயன்படுத்தி ஊடுருவிய ரஷ்யா.. தடுத்து நிறுத்திய பிரிட்டன்…

naveen santhakumar