உலகம் சினிமா

அமெரிக்காவின் இளம் வயது ராப் பாடகர் மரணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் இளம் வயது ராப் பாடகர் மரணம்

அமெரிக்காவின் இளம் பாடகரான ஜரத் அந்தோணி ஹிக்கின்சின் மரண செய்தி அவர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற இளம் ராப் பாடகர் ஜரத் அந்தோணி ஹிக்கின்ஸ். 21 வயதான இவர் ரசிகர்களால் ‘ஜூஸ் வேர்ல்ட்’ என்று அன்பாக அழைக்கப்படுவார். இவரது ராப் பாடல்கள் மன ஆரோக்கியம், இறப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு இருக்கும். இதனால் இவர் பாடிய ராப் பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ALSO READ  நடிகை நந்திதாவிற்கு கொரோனா தொற்று !

இந்நிலையில் நேற்று முன்தினம் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவுக்கு விமானத்தில் சென்ற ஜரத், சிகாகோவின் மிட்வே விமான நிலையத்தில் சென்று இறங்கியபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வலிப்புக்கு பின்னர் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  புபோனிக் பிளேக் மரணம் சீனாவில் கிராமம் சீல் வைப்பு... 

இளம் ராப் பாடகர் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாவ்.. நெருப்பு அருவியைப் பார்த்து இருக்கிங்களா?

Admin

பிரிட்டன் விமான போக்குவரத்துக்கு தடை : ரஷ்யா அறிவிப்பு  

News Editor

பூஜா ஹெக்டே செய்த காரியம்: பொதுமக்கள் ரியாக்சன் என்ன ?

naveen santhakumar