உலகம்

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் இந்திய நேரப்படி மதியம் 1.39 மணியளவில் மத்திய மீ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், நிலநடுக்கத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும், கடுமையான நில அதிர்வை உணர்ந்தன என்றும் மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஷிங்கன்சென் புல்லட் ரெயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன என்றும் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன என்றும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
ALSO READ  ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாதைகளை கண்டறிய பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தும் நாய்கள்!!…. 

naveen santhakumar

நெகிழ்ச்சியான சம்பவம்….24 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை கண்டறிந்த தந்தை :

Shobika

ஹாகியா சோப்பியாவை மீண்டும் மசூதியாக மாற்றிய துருக்கி- போப் வேதனை… பின்னணி என்ன??

naveen santhakumar