உலகம்

பெண் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்……அதிர்ந்த வீராங்கனை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெண் என்பதை நிரூபிக்கவேண்டும் என பிரபல பளுதூக்கும் வீராங்கனையிடம் விமான சேவை நிறுவனம் ஒன்று கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் கிராஸ்னோடார் பகுதியை சேர்ந்தவர் ஆனா துரேவா. பளு தூக்கும் வீராங்கனையான இவர் ரஷ்ய நாட்டிற்காக பல முறை பதக்கம் வென்றுள்ளார். வெவ்வேறு ஆண்டுகளில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டிகளில் மொத்தம் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சமீபத்தில் தன்னை தற்பாலின ஈர்ப்பாளர் என்று தெரிவித்துக்கொண்ட அவர் தற்போது பளு தூக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாஸ்கோவில் இருந்து தன் சொந்த ஊருக்கு விமானத்தில் செல்ல முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.விமான நிலையத்திற்கு சென்றபோது ‘ஆனா’ ஒரு பெண்தானா???? என்பதில் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து, பெண் என்பதை நிரூபிக்க வேண்டும் என அனைத்து பயணிகள் முன்னிலையிலும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியரிடம் ஆனா தெளிவாக விவரித்தார்.

ALSO READ  ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

இதுகுறித்து ஆனா பேசியபோது, “அனைவர் முன்னிலையில் அந்த ஊழியர் அவ்வாறு கூறியது என்னை மிகவும் உலுக்கிவிட்டது. யார் முன்னிலையிலும் என்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. நான் அனைத்தையும் தெளிவாக விளக்கிய பின்னரும் என்னை விமானத்திற்குள் அனுமதிக்க அவர்கள் தீவிரமாக கலந்தாலோசித்தனர். இறுதியில் எனக்கு அனுமதி அளித்தனர். அந்த விமான சேவை நிறுவனம் என்னிடம் மன்னிப்பு கோரவேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த விமான சேவை நிறுவனம் ஆனாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸிற்காக சீனப் பணக்காரர் அள்ளிக்கொடுத்த தொகை!!!

Admin

இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு….

naveen santhakumar

டோக்கியோவில் நாளை தொடக்கம் ! பாராலிம்பிக் போட்டிகள்!

News Editor