உலகம் விளையாட்டு

டோக்கியோவில் நாளை தொடக்கம் ! பாராலிம்பிக் போட்டிகள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை முதல் மாற்றுத்திறனனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.இந்தப் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட ஒன்பது வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது.

ALSO READ  ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: உதவிக்கரம் நீட்டும் வீரர்கள்

ஜப்பானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி

When Mariyappan Thangavelu used to work as newspaper hawker

வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து...காரணம் என்ன தெரியுமா???

ஆனால் பாராலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடு இரவில் உதிக்கும் சூரியன்.. சிறைக்கைதிகளுக்கு Internet.. எந்த நாடு தெரியுமா?

News Editor

ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவி சீனா பரிசோதனை

News Editor

ஆஸ்திரேலிய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

Admin